வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி.

CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ORHAN அரசுசார்பற்ற நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய120 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வீட்டுப்பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதன் முதல் நிகழ்வு 28.01.2026 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் திருமதி கலாஞ்சலி டர்சன அருனசாந்த தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டு பொருட்களை வழங்கிவைத்தார்.

1. வவுனியா வடக்கு நெடுங்கேணி – 40 இயலாமையுடன் கூடியபெண்கள்
2. வவுனியா நகர் -30 இயலாமையுடன் கூடியபெண்கள்
3. வெண்கலச்செட்டிகுளம்–30 இயலாமையுடன் கூடியபெண்கள்
4. வவுனியா தெற்கு–20 இயலாமையுடன் கூடியபெண்கள்

இயலாமையுடன் கூடிய120 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பயன்பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.