காணாமல் போன சிறுமி பிணமாக மீட்பு! – ஆந்திராவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு: சிக்கிய சிசிடிவி காட்சிகள்.
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் மதனப்பள்ளி எனும் நகராட்சிப் பகுதியில் ஏழு வயது சிறுமி ஒருவர் தனது அயல் வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (17) சந்தேக நபரின் வீட்டிலிருந்து சிறுமியின் உடலை பொலிஸார் மீட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குற்றத்தை உறுதிப்படுத்திய சிசிடிவி காட்சிகள்
திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சிறுமி காணாமல் போனதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு எதிரே வசிக்கும் சந்தேக நபர், சிசிடிவி காட்சிகள் குற்றத்தை உறுதிப்படுத்திய பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து சந்தேக நபரின் வீட்டின் அருகே கூடிய மக்கள் , சந்தேக நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
மக்கள் கொந்தளிப்பு பதட்டமாக மாறியதனால், பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
