நாட்டை வந்தடைந்தது எரிவாயு ஏற்றிய கப்பல்! – 3 இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு தட்டுப்பாட்டுக்கு முடிவு கண்ட லிட்ரோ.

3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 3 இலட்சம் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன.

எவ்வாறாயினும், நேற்று நாட்டின் பல பகுதிகளில் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் போதுமான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் வரவுள்ளன எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.