ஒடிசாவில் கொடூரம்: 7-ஆம் வகுப்பு மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியர்கள் கைது!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளிடம் ஆசிரியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளார்.

பின்னர் அவர் அடிக்கடி அந்த மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த தகவல் மற்ற சில ஆசிரியர்களுக்கும் தெரியவர நீண்ட நாட்களாக மேலும் 4 ஆசிரியர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்து அந்த மாணவி சமீபத்தில் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அவர்கள் தனித்தனியாக பொலிஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கேந்திரபாரா மாவட்ட மூத்த காவல் அதிகாரி கூறுகையில், “மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், அவரின் தந்தை முதலில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவை அணுகியுள்ளாா்

அவா்கள் நடத்திய விசாரணையில், பள்ளியின் 5 ஆசிரியா்கள் மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் அவா்கள் ராஜ்கனிகா காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில், பொலிஸார் விசாரணை நடத்தி, 5 ஆசிரியா்களையும் கைது செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வி அலுவலரையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அறிவுறுத்தியுள்ளது” என்றாா்.

இதனிடையே கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.