வெலிகமை கடலில் மூழ்கி ஆஸி. பிரஜை பரிதாபப் பலி! – மனைவியுடன் நீராடியபோது நேர்ந்த விபத்து.

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மதியம் மாத்தறை – வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலேன கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 76 வயதுடைய ஆஸ்திரேலிய நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி வெளிநாட்டுப் பிரஜை தனது மனைவியுடன் பெலேன கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெலிகமை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.