வெடி விபத்தில் குடும்பஸ்தர் பலி! – யாழில் மடுமாதா யாத்திரை புறப்பட்ட போது துயரச் சம்பவம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மடுமாதாவுக்கு யாத்திரை புறப்பட்ட போது கொளுத்தப்பட்ட வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ். குருநகர் – ஐந்துமாடி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சுஜீபன் (வயது 32) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ருநகர் – ஐந்துமாடி குடியிருப்புப் பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மடுமாதா நோக்கி யாத்திரை புறப்பட்டுள்ளது. யாத்திரை புறப்படுவதை முன்னிட்டுப் பெருமளவான வெடிகள் கொளுத்தப்பட்டுள்ளன.
அப்போது கொளுத்தப்பட்ட கோர்வை வெடி ஒன்று வெடிக்காத நிலையில், அதனை மீண்டும் கொளுத்துவதற்காக அருகில் மேற்படி நபர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடி வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
