கைவிடப்பட்ட படகில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் மரணமடைந்த விதம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது ஒரு சந்தேகத்துக்குரிய மரணம் எனப் பொலிஸார் கருதுகின்றனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.