மோட்டார் சைக்கிள் – சைக்கிள் மோதி விபத்து: 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்! – நான்கு வயது சிறுமி படுகாயம்.
பொலன்னறுவை, சேவாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில், படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் நான்கு வயது சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாவதிய வீதியின் சேவாகம பகுதியில், நேற்று வியாழக்கிழமை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பொலன்னறுவை, பளுகஸ்தமன பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 80 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த முதியவரும் சிறுமியும் உடனடியாகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலன்னறுவை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
