பஞ்சாபில் அதிர வைக்கும் மின்னஞ்சல்: ஜலந்தர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மாணவர்கள் வெளியேற்றம்!

பஞ்சாபில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.

உடனே காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகள், வெடிகுண்டு அகற்றும் படைகள், மோப்ப நாய் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பள்ளி வளாகத்திற்கு விரைந்தன.

சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருள்களும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. வெடிகுண்டு மிட்டலைத் தொடர்ந்து பள்ளிகளில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியும், பஞ்சாப் சிவில் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான அல்லது வெடிக்கும் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதேபோல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி சண்டீகரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன.

Leave A Reply

Your email address will not be published.