ஈரான் தூதரகத்தில் ஹக்கீம் இரங்கல்! – உயிரிழந்த உயர் தலைவருக்கு தூதுவரிடம் நேரில் அனுதாபம்.

ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பு – 07 இல் அமைந்துள்ள அந்நாட்டுத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை கையொப்பமிட்டனர்.

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிராந்திய அமைதி மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்தும் சுருக்கமாகக் கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.