சிலாபத்தில் கோர விபத்து லொறிச் சக்கரங்களுக்குள் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாகப் பலி!
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மயானத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக எதிர்த்திசையில் வந்த லொறியின் சக்கரங்களுக்குள் சிக்கி அவர் நசுங்கியுள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மஹாவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண், சிலாபம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைச் சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
