லொறி மோதி இளைஞர் பலி! – வீதியைக் கடக்க முயன்றபோது துயரம்.

கேகாலை மாவட்டம், வரகாப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபேபுஸ்ஸ – குருநாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அபேபுஸ்ஸ திசையிலிருந்து வாரியகொட திசை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக வரகாப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி வரகாப்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.