அனுராதபுரத்தில் கோர விபத்து! பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!! – கர்ப்பிணி மனைவி உட்பட நால்வர் படுகாயம்.

அனுராதபுரம், எப்பாவலை – பொத்தேகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் கர்ப்பிணி மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என நால்வர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றி வந்த மேற்படி பொலிஸ் சார்ஜன்ட், தனது குடும்பத்தினர் மற்றும் சக பொலிஸ் கான்ஸ்டபிளுடன் நேற்று சிறிய லொறியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அதிவேகமாகச் சென்ற சிறிய லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ்ஸின் பக்கவாட்டுக் கண்ணாடியில் மோதியதுடன், அருகில் இருந்த பஸ் நிறுத்தத்துடன் மோதித் தடம் புரண்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் முதலில் எப்பாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.