பஸ் – ஓட்டோ மோதி விபத்து! ஆண் ஒருவர் உயிரிழப்பு!! – பெண் ஒருவர் படுகாயம்

ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகள் பஸ் ஒன்றும், ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது ஓட்டோவில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அதிலிருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.