பூஜை என்ற பெயரில் 58 பெண்கள் வன்கொடுமை! மோசடிப் பணத்தில் 150 முறை வெளிநாட்டு உல்லாசப் பயணம் – நாசிக்கில் அதிர்ச்சி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் அசோக் கராத். இவர் தன்னை ஜோதிடர், எண் கணித நிபுணர் என அழைத்துக் கொண்டு தன்னை நாடி வரும் பெண்களிடம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டது அம்பலமாகியது.

புகார்கள் குவிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அசோக் கராத் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அசோக் கராத் தன்னிடம் வரும் பெண்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தியுள்ளார். ஒரு கர்ப்பிணிப் பெண் அளித்த புகாரின்பேரில் அசோக் கராத்தின் தவறான செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவரை அறைக்கு வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பூஜை என்ற பெயரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு அசோக் கராத் மீது பல்வேறு புகார்கள் குவிய ஆரம்பித்தன.

அவர் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி எப்படி அத்துமீறினார் என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது. மூடநம்பிக்கை மற்றும் பயத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி நூற்றுக்கணக்கானோரை தனது வலையில் விழவைத்துள்ளார்.

தனது சொல்படி நடந்து கொள்ளாதவர்களிடம் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி சிலரை தன் கட்டுப்பாட்டிற்குள்ளாகவே வைத்திருக்கிறார். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பொம்மை பாம்புகள், புலித்தோல்கள் மற்றும் வனவிலங்குகளை வைத்து உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் தன்னை நம்பி வருபவர்களிடம் வசூல் வேட்டையாடியதில் கோடிகளில் பணம் குவிய குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த தகவலும் தெரியவந்துள்ளது. மொத்தம் 150 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் மகராஷ்ராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.