தொடர் நிலநடுக்கங்களால் குலுங்கிய இந்தியா: அதிகாலை முதல் அடுத்தடுத்து 3 முறை அதிர்வு!

புதுடெல்லி,

லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 1.44 மணியளவில் ரிக்டர் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அசாமின் மோரிகன் பகுதியிலும் இன்று அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இந்தியாவில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 10.25 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்தவித தகவலும் உடனடியாக வெளியாக வில்லை.

Leave A Reply

Your email address will not be published.