சர்வதேசப் பதற்றத்திலும் சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியை அதிகளவில் கடந்தது இந்தியக் கப்பல்களே!

புதுடெல்லி,

அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த ஜலசந்தியை கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் இதற்காக தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி யுடன் இந்தியாவுக்குc வரவேண்டிய 18 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியக் கப்பல்களே அதிக அளவில் கடந்ததுள்ளன. இதுவரை ஷிவாலிக், நந்தா தேவி உள்ளிட்ட 9 இந்தியக் கப்பல்கள் கடந்துள்ளன. இதனால் இந்தியாவில் சாமானிய மக்களின் எரிசக்தித் தேவை தொடர்ந்து பூர்த்தி செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.