வெறும் 400 ரூபாய்க்காக உயிரைப் பறித்த சிறுவர்கள்: டெல்லியில் நடந்த பகீர் கொலைச் சம்பவம்!

புது டெல்லி,

வடகிழக்கு டெல்லியின் தயால்பூர் பகுதியில் உள்ள நியூ முஸ்தபாபாத் பகுதியை சேர்ந்த முகமது கைப் (26) வாழ்ந்து வந்தார். மேலும் இவர் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சிறுவர்களிடம் ரூ. 400 கடன் வாங்கியிருந்ததாகவும், அதை நீண்ட நாட்களாக திருப்பி தராமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கைப் தனது வேலையை முடித்துவிட்டு திரும்பி கொண்டிருந்தபோது, அந்த சிறுவர்கள் மறித்தனார். மேலும் எங்கள் பணத்தை இப்போதே கொடு என அவர்கள் மிரட்டினர். இதனை தொடர்ந்து கைப் தன்னிடம் இப்போது பணம் இல்லை என்றும், இன்னும் சில நாட்களில் தந்துவிடுவதாகவும் கூறியதாக தெரிகிறது. வெறும் 400 ரூபாய்க்காக தொடங்கிய அந்த வாக்குவாதம், திடீரென வன்முறையாக மாறியது.

எதிர்பாராத நேரத்தில், சிறுவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கைப்பை சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் கைப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது கைப்யை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனை தொடர்ந்து தயால்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுமார் 16 வயதுடைய அந்த மூன்று சிறுவர்களையும் நேற்று காலை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கத்திகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அண்மையில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றின் தாக்கத்தால் இந்த சம்பவத்தில் சிறுவர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர் மேலும் இந்த கொலை சம்பவத்தை அந்த சிறுவர்கள் தங்கள் மொபைலில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.