ஆரம்பித்தது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது.

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் ஒருநாள் சேவை பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

முதற்கட்டத்தின் கீழ், முன்னுரிமை அடிப்படையில் ஒருநாள் சேவை அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்பதோடு, ஒன்லைன் மூலமாக திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் 250 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.