கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் என்பதோடு, கடல் கொந்தளிப்பாக காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, புத்தளத்திலிருந்து, கொழும்பு, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

அத்தோடு, கடற்பிரதேசங்களில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களும், கடற்படையினரும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.