இன்று நள்ளிரவு முதல் கியூ.ஆர். இன்றி பெற்றோல் விநியோகம்! – பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சலுகை.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கியூ.ஆர். குறியீட்டு நடைமுறையின்றி பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த விசேட நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர். குறியீட்டு முறை தற்காலிகமாக நீக்கப்பட்ட போதிலும், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையிலான ஒற்றை, இரட்டை முறைமை இந்தக் காலப்பகுதியில் கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பயணத் தேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்தத் தளர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.