தேசிய சம்பியன் ‘நாவாந்துறை சென். மேரிஸ் அணி’யை நேரில் கௌரவிக்க யாழ்ப்பாணம் மாநகர சபை தீர்மானம்.

அண்மையில் நடைபெற்ற தேசிய மட்டக் கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனான நாவாந்துறை சென். மேரிஸ் அணியைக் கௌரவிப்பது என யாழ்ப்பாணம் மாநகரசபை தீர்மானம் எடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு மேயர் மதிவதனி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது, தேசியத்தில் கிண்ணம் வென்ற நாவாந்துறை சென். மேரிஸ் அணியை யாழ்ப்பாணம் மாநகர சபை கௌரவிக்க வேண்டும் என்று பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன் கோரிக்கையை முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, சபையினரால் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அணியினரை அழைத்து கௌரவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.