இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: இரு சாரதிகளும் பரிதாபகரமாகச் சாவு!

காலி மாவட்டம், எல்பிட்டி பிரதான வீதியில் இரண்டு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு எல்பிட்டி பிரதான வீதியில் இரண்டு ஓட்டோக்கள் அதிவேகமாகப் பயணித்தபோது, எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் கோரத்தால் இரண்டு ஓட்டோக்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு ஓட்டோக்களின் சாரதிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.