முன்னாள் எம்.பி. சந்தன கத்ரி ஆராச்சி சட்டவிரோத ஆயுதங்களுடன் சிக்கினார்! – பிடியாணையுடன் சென்ற பொலிஸாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி, அபாயகரமான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து ரி – 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு மகசீன்கள், அதற்குரிய 221 தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிடியாணை ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, குறித்த ஆயுதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
