விசுவமடு பகுதியில் தேனீர் கடையினுள் புகுந்து வாள் வெட்டு.

கிளிநொச்சி தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் தேனீர் கடை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவேளை இனந்தெரியாத நபர் ஒருவரால் வாள்வெட்டு நடாத்தப்பட்டுள்ளது.

பலத்த  காயங்களுக்கு உள்ளான நபர் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மயில்வாகனபுரம் பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சுலக்சன் வயது 20 இது சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.