அநுராதபுரம் வர்த்தக வங்கியில் கொள்ளை கும்பல் பணம் திருட மேற்கொண்ட முயற்சி தோல்வி.

அநுராதபுரம் நகரிலுள்ள வர்த்தக வங்கியொன்றில் பணத்தை திருட வந்த கொள்ளையர் அல்லது கொள்ளை கும்பல் வங்கியின் சமிக்ஞை அமைப்பின் செயற்பாட்டினால் கொள்ளையை கைவிட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24) அதிகாலை அநுராதபுரம் பொது வர்த்தக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக வங்கியில் கொள்ளை கும்பல் பணம் திருட மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

வங்கி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கயிற்றின் உதவியுடன் கீழே இறங்கி கிரைண்டர் மற்றும் சுத்தியலின் உதவியுடன் அதன் பெட்டகத்தை உடைத்த போது வங்கியின் சமிக்ஞை அமைப்பு திடீரென செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளையர்களால் அறுக்கப்பட்ட பெட்டகத்தில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

நேற்று (24) காலை வங்கியின் ஹார்ன் சிக்னல் சிஸ்டம் தொடர்ந்து ஒலித்ததையடுத்து விழித்து பார்த்தபோது வங்கியின் பின்னால் ஆண் ஒருவர் ஓடுவதைக் கண்டதாக வங்கியின் பின்புறம் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக பொலிஸார் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இந்த வர்த்தக வங்கி பல தடவைகள் திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

வங்கிக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்த கும்பலை கைது செய்ய அனுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.