களனி கங்கையில் நீராடிய ஒருவர் நீரில் மூழ்கிச் சாவு!

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலிகம பகுதியில், களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மேற்படி நபர் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, கித்துல்கல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட விசேட அதிரடிப்படையின் உயிர் காப்புப் பிரிவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து அந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன், மொரஹேனகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது உறவினர்களுடன் சுற்றுலாச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.