மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கும்பகோணம் பெண் தேஜா 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

கும்பகோணம்,

கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’போட்டியில் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

3-ம் இடம் பிடித்து சாதனை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி, தேசிய அளவிலான ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல மநிலங்களிலிருந்து வந்த பல்வேறு அழகிகள் பங்கு பெற்றனர். அதில், கும்பகோணத்தைச் சேர்ந்த தேஜா என்ற பெண் 3-ம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

சாதனைப் பயணம்
கடந்த 2 ஆண்டுகளாக மாடலிங் துறையில் பயணித்து வரும் தேஜா, கும்பகோணம் போன்ற உள்மாவட்டப் பகுதியில் இருந்து வந்து இந்த தேசிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக 3 மாவட்டப் பட்டங்கள் மற்றும் 2 மாநிலப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.

அரசுக்குக் கோரிக்கை
தமது வெற்றி குறித்துப் பேசிய தேஜா, “பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மாடலிங் துறைக்கான விழிப்புணர்வும், முறையான வழிகாட்டுதல்களும் குறைவாக உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், இத்துறையில் ஆர்வமுள்ள தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முறையான பயிற்சி அளிக்க, தமிழக அரசு பிரத்யேகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.