தெதுரு ஓயாவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு – இன்று மீட்கப்பட்டன எஞ்சிய சடலங்கள்..
கொபேகனை, குரட்டியகஹமுல்ல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நேற்று நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 6 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நீராடிய குழுவொன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இருவர் உயிருடனும், மேலும் இருவர் சடலங்களாகவும் மீட்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது நான்கு சடலங்கள் முதலில் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக தேடுதலில் எஞ்சிய இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் தற்போது நிக்கவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று உயிருடன் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். மற்றையவர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
