புதிய வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக பதவியேற்பு.

இலங்கையின் புதிய வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பதவியேற்றுக்கொண்டார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய அமைச்சர் தனது பதவியைப் பொறுப்பேற்றுச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அண்மையில் ஏற்பட்ட வலுசக்தித் துறை சார்ந்த நெருக்கடிகளைத் தொடர்ந்து இந்த முக்கிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நாட்டின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளின் பிரதான பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.