தமிழ்நாட்டில் மறுவாக்குபதிவு இல்லை

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் எந்த வாக்குசாவடியிலும் மறு வாக்குபதிவுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களின் விவரம் அடங்கிய படிவம் 17ஏ உள்ளிட்ட தேர்தல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அதில், 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில் எந்த ஒரு வாக்குச்சாவடிக்கும் மறுதேர்தல் பரிந்துரைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் ஆய்வுக்குப் பின், படிவம் 17ஏ மற்றும் தேர்தல் தொடர்புடைய ஆவணங்கள் மீண்டும் சீல் வைக்கப்பட்டதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங்க் ரூம்களில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.