இலங்கை மீனவர் மீதான கொடூர தாக்குதல்: நாமல் கடும் கண்டனம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ் நாட்டில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட் டுள்ளார்.

இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளமை மிகுந்த கவலைக்குரிய சம்பவம். இத்தகைய வன்முறைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை.

இந்தச் சம்பவத் தில் பாதிக்கப்பட்ட மீனவரின் உடனடிப் பாதுகாப்பை உறுதி செய்து, அவரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் இலங்கைக்கு மீள அழைத்து வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்தச் சம்பவம் வடக்கு மாகாண மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதை வெளிப்படுத்துகின்றது.

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்னைகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், அங்குள்ள பொலிஸாரின் முன்னிலையில் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது கவலைக்குரியது.” – என்றும் நாமல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.