கடல்சார் பாதுகாப்பில் புதிய உச்சம்: ஒடிசா கடலோரத்தில் NASM-SR ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் கடல்சார் தாக்குதல் திறனை மேம்படுத்தும் வகையில், குறுகிய தூரம் செல்லக்கூடிய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
NASM-SR ஏவுகணை
இந்திய DRDOவின் பல்வேறு பிரிவுகள் இணைந்து இந்த குறுகிய தூரம் செல்லக்கூடிய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை (NASM-SR) வடிவமைத்தன.
நேற்று ஒடிசா மாநிலம் வங்காள விரிகுடா கடல் எல்லைக்கு அப்பால், நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து அடுத்தது 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் நிறுவப்பட்ட ரேடார், மின்-ஒளியியல் அமைப்புகள் மற்றும் தொலை அளவியல் உள்ளிட்ட தொலைவு கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சோதனை நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது இந்தியாவின் முதல் வான்வழி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை ஆகும்.
12 அடி நீளமுள்ள இந்த ஏவுகணை, 55 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை அமைப்பில் ஃபைபர்-ஆப்டிக் கைரோஸ்கோப் அடிப்படையிலான வழிசெலுத்தல், ஜெட்-வேன் கட்டுப்பாடு, தேடு கருவி மற்றும் உயர் அலைவரிசை தரவு இணைப்பு உள்ளிட்ட மேம்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஏவுகணை ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் என்று கூறிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெற்றிகரமான சோதனைக்காக DRDO, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் தொழில் கூட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
.@DRDO_India & @indiannavy successfully conducted the first-ever salvo launch of the Naval Anti-Ship Missile–Short Range (NASM-SR) from a helicopter platform off the Bay of Bengal, Odisha.
Two missiles fired in quick succession hit waterline targets with precision, meeting all… pic.twitter.com/oKK9zuvf0j
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) April 29, 2026
