விஜயின் த.வெ.கவுக்கு மோடி வாழ்த்து மழை! மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதிமொழி.
தமிழக சட்டசபைத் தேர்தலில் களம் கண்டு வெற்றியைப் பதிவு செய்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் நிற்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயற்பாட்டுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் மத்திய அரசு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.” – என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.கவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளமை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
