புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு நித்யானந்தா வாழ்த்து

புதுச்சேரி,

புதுவை, தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதுவையில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் கைலாசாவில் வசித்து வரும் நித்யானந்தா அவரின் சமூக வலைதள பக்கத்தில் புதுவையில் மீண்டும் பா. ஜனதா கூட்டணி ஆட்சியை பிடித்ததற்கும், என்.ஆர். – காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கும் தனது வாழ்த்துக்களை கூறி பதிவு வெளியிட்டுள்ளார்.

இதேபோல தமிழ்நாடு உட்பட 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.