வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தவெக தலைவர் விஜய்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

“பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள்.

அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!

நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என்று பதிவிட்டுள்ளார்.

தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. விசிக, இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திமுகவும் அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து விஜய் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அரசியல் நிலவரத்திற்கும் இது பொருந்தும் வகையில் இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.