ஓட்டோ தடம்புரண்டு விபத்து! 4 வயதுச் சிறுவன் மரணம்!! – பெற்றோர் காயங்களுடன் வைத்தியசாலையில்…
மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் ஓட்டோ வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி சிறுவன் நேற்று இரவு தனது பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும், ஓட்டோச் சாரதியும் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
