காட்டு யானையின் தாக்குதலில் தந்தை, மகள் பரிதாப மரணம்! – வேலைக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்.

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை, தந்தை தனது மகளை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே, திடீரென வழிமறித்த காட்டு யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த வில்கமுவ பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.