வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்.

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த விசேட நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பணிப்பாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர் நா.வேதநாயகனிடமிருந்து புதிய பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தனது நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

இந்த முக்கியத்துவமிக்க நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.