ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் சரித்திரம் படைத்த சூரரை போற்று.

கடந்த 12ம் தேதி அமேசான் தளத்தில் சூரரைப்போற்று படம் வெளியானது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வாழ்க்கை வரலாறு படமாக உருவான சூரரைப்போற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தியேட்டரை குறி வைத்து உருவான சூரரைப்போற்று திரைப்படம் எதிர்பாராத சிக்கல்களால் நேரடியாக அமேசான் தளத்திற்கு விற்கப்பட்டது.

ரசிகர்கள் பெரிய அளவில் கவலை அடைந்தாலும் விரைவில் புதிய படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அமேசான் தளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அமேசான் தளத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் சர்வரே திணறி விட்டதாம்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை அமேசான் தளத்தில் வெளியான ஹாலிவுட் படங்களுக்கு கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள்.

ரிலீசுக்கு முன்னரே பைரஸியில் சூரரை போற்று

தற்போது சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. சூரரை போற்று படத்தின் மூலம் நல்ல லாபம் பெற்றுள்ளதாம் அமேசான்.

 

Leave A Reply

Your email address will not be published.