குற்றம் நடந்த 76 நாட்களில் தூக்கு தண்டனை! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி கட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் மாணவிகளை பலாத்காரம் செய்யும் குற்றச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி 12ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை தற்போதும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தினைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்கு காட்டுக்குள் சென்ற போது காணாமல் போயுள்ளார்.

உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில் 11ம் தேதி உடலில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த கொடுமையை செய்தது ரவுடி தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்ததையடுத்து, போலிசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே வயதான பாட்டி ஒருவரையும் இவ்வாறு வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வந்த நிலையிலேயே மீண்டும் இப்படியொரு குற்றத்தினை செய்துள்ளார்.

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணை மேற்கொண்ட நிலையில் இதன் தீர்ப்பினை இன்று போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிபதி அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றம் நடந்த 76 நாட்களில் நீதிமன்றம் இவ்வாறான தண்டனையை குற்றவாளிக்கு கொடுத்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.