ரூ.34 கோடி மனிதநேயம்: சவுதி மரண தண்டனையிலிருந்து ரஹீமை மீட்ட கேரள மக்கள்!

சவுதி அரேபியாவுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ரஹீம் டிரைவர் வேலைக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் பணியாற்றிய ரஹீம், மாற்றுத்திறனாளி சிறுவனை பராமரித்து வந்துள்ளார். அப்போது, செயற்கை சுவாசக் கருவியை கவனக்குறைவாக தட்டிவிட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தற்செயலான மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கருதப்பட்டதால், ரஹீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னித்தால், மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளில் இருந்து விடுபடலாம் என்ற சட்டம் சவுதி அரேபியாவில் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ரூ.34 கோடி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொண்டு பொது மன்னிப்பு வழங்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ரூ.34 கோடியை செலுத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கேரள மக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். ரூ.34 கோடி திரட்டப்பட்டதை அடுத்து, ரஹீம் விடுவிக்கப்பட்டார். சவுதி அரேபியாவில் இருந்து விடுதலையான ரஹீம் நேற்று கேரள மாநிலத்தின் கோழிக்கோடு வந்தடைந்தார். அவருக்கு கேரள மக்கள் நெகிழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.