வவுனியாவில் கோர விபத்து கணவர் பலி; மனைவி காயம்.
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
விபத்தையடுத்து சொகுசு பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
