மலபார் போர்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

குவாட் நாடுகள் பங்குபெறும் மலபார் போர்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.முதல் கட்டம் நடந்து முடிந்த வேளையில் தற்போது நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நாளை நடைபெற உள்ளது.

மேலும் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பல் வந்துள்ளது.

இந்தியா சார்பில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா,ஐஎன்எஸ் கொல்கத்தா,ஐஎன்எஸ் சென்னை ,ஐஎன்எஸ் தல்வார், ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் காந்தேரி ஆகிய கப்பல்கள் கலந்து கொள்ள உள்ளன.

அமெரிக்கா சார்பில்
USS Nimitz விமானம் தாங்கி கப்பல், USS Princeton க்ரூசர் கப்பல், USS Sterett டெஸ்ட்ராயர் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.

ஆஸ்திரேலியா கடற்படை சார்பில் HMAS Ballarat பிரைகேட் கப்பல் கலந்து கொள்ளும்.ஜப்பான் கடற்படை சார்பில் கலந்து கொள்ள உள்ள கப்பல்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை

Leave A Reply

Your email address will not be published.