நெகிழ வைத்த திருச்சி காவல்துறை: விபத்தில் சிக்கிய நீட் மாணவிக்கு உடனடி உதவி!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்தத் தேர்வை மொத்தம் 22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் உள்ள 307 தேர்வு மையங்களில் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவர் விபத்தில் சிக்கினார்.

அவர்களது இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதியதில் மாணவிக்கும், அவரது தந்தைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், மாணவி சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைய வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.