இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சாவு! – குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்.

காலி மாவட்டம், நாகொடை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், அதனைச் செலுத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தச் சோகமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்தில் பயணித்தமையே இந்த நேர் மோதல் விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.