கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!
கேகாலை மாவட்டம், கலிகமுவை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை அவரது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கலிகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி யுவதி, தங்கியிருந்த வீட்டின் உள்ளே தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டதை அடுத்து, அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த கலிகமுவை பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
