கோர விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபச் சாவு!

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சாரதியும், அதன் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாகக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தையடுத்து பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொத்துஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.