கைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குக! – சுரேஷ் சலேவுக்கு கோட்டை நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைத்தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை நடவடிக்கைகளுக்காக, அவரது மின்னணு சாதனங்களில் உள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கிலேயே நீதிமன்றம் இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாதனங்களை முழுமையாகப் பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக, அவற்றின் கடவுச்சொற்களைக் குற்ற ப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் உடனடியாக வழங்குமாறு கோட்டை நீதிவான் சுரேஷ் சலேவுக்குப் பணித்துள்ளார்.
