இந்திய ராணுவத்தின் 31-வது தலைமை தளபதியானார் ஜெனரல் தீரஜ் சேத்!

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றார். இந்திய ராணுவத்தின் 30-வது தலைமை தளபதியாக இருந்த ‘ஜெனரல் ‘உபேந்திர திவேதி செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார்.

அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் 31-வது தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதை முன்னிட்டு, நேற்று அவருக்கு ராணுவத்தின் சார்பில் பிரம்மாண்ட அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அந்த மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தையும், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான கே.எம்.சேத்திற்கு, தளபதி தீரஜ் சேத் கம்பீரமாக சல்யூட் அடித்தார். 1997-ம் ஆண்டு இந் திய ராணுவத்தின் அட்ஜுடன்ட் ஜெனரலாக கே.எம். சேத் ஓய்வு பெற்றபோது, அவரது மகன் தீரஜ் சேத் ராணுவத்தில் கேப் டன் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த விழாவில் பங்கேற்ற தீரஜ் சேத்தின் தம்பியும், இந்திய கடற்படையின் ரியர் அட்மிரலுமான ரவ்னிஷ் சேத், நாட்டின் புதிய ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள தனது அண்ணனுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன்கள் நாட்டின் மிக உயரிய ராணுவப் பொறப்புகளை வகித் து, இந்த மரியாதையைப் பரிமாறிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.